அன்புமணியால் என் உயிருக்கு ஆபத்து.. டிஜிபி அலுவலகத்தில் ராமதாஸ் அதிரடிப் புகார்… பெரும் பரபரப்பு..!!

By Soundarya on சித்திரை 25, 2026

Spread the love

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்துள்ள விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதன் என்பவர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் மூன்றாவது முறையாகப் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களால் ராமதாஸின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இது தொடர்பாக இரண்டு முறை காவல்துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளித்தும், இதுவரை எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த மனுவில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சிக்குள்ளும், குடும்பத்திற்குள்ளும் ஏற்பட்டுள்ள இந்த அதிகாரப் போட்டி மற்றும் மோதல் போக்கு தற்போது காவல்துறை வரை சென்றுள்ளதால், பாமக தொண்டர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களிடையே இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் உண்மைத்தன்மை குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் புகார்தாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.