கூகுள் பே, போன் பே-வுக்கு டஃப் கொடுக்கும் வாட்ஸ்அப்… இனி இதுலயே ரீசார்ஜ் செய்யலாம்… பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!

By Soundarya on சித்திரை 24, 2026

Spread the love

மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் எளிதாக மொபைல் ரீசார்ஜ் செய்து கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி வாட்ஸ்அப் யுபிஐ (WhatsApp UPI) மூலமாகவே ஏர்டெல் (Airtel), வி (Vi), மற்றும் ஜியோ (Jio) ஆகிய முன்னணி நிறுவனங்களின் மொபைல் ரீசார்ஜ்களை நேரடியாகச் செய்துகொள்ள முடியும். இதற்காகப் பயனர்கள் தனிப்பட்ட ரீசார்ஜ் செயலிகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இனி இருக்காது.

தற்போது ஜியோ, ஏர்டெல், மற்றும் வோடபோன்-ஐடியா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த வசதி, விரைவில் பிஎஸ்என்எல் (BSNL) பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் ஏற்கனவே பணப் பரிமாற்றம் மற்றும் டிக்கெட் முன்பதிவு போன்ற வசதிகளைக் கொண்டுள்ள நிலையில், இந்த புதிய மொபைல் ரீசார்ஜ் வசதி பயனர்களுக்கு மேலும் நேரத்தைச் மிச்சப்படுத்தும் ஒரு முக்கிய அப்டேட்டாகப் பார்க்கப்படுகிறது.