பகீர்..! முன்னாள் காதலன் மீது ஆத்திரம்… மனைவியை வீடு புகுந்து குத்திக் கொலை செய்த காதலி… போலீசில் சிக்கியது எப்படி…?

By Soundarya on சித்திரை 23, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் பஜாஜ் நகரில் உள்ள சாய் ஸ்ரத்தா பார்க் பகுதியில், முன்னாள் காதலனின் மனைவியைக் கொடூரமான முறையில் கத்தியால் குத்திக் கொலை செய்த 45 வயதுப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஷைலா சோனார் என்பவருக்கும், உயிரிழந்த சாதனா சோன்பெட்கரின் கணவருக்கும் இடையே முன்பு காதல் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த உறவில் ஏற்பட்ட விரிசல் மற்றும் பணத் தகராறு காரணமாக இருவருக்கும் இடையே நீண்டகாலமாகப் பகை இருந்து வந்துள்ளது.

சம்பவத்தன்று சாதனாவின் வீட்டிற்குள் புகுந்த ஷைலா, அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த ஷைலா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாதனாவை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சாதனா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கொலையாளியை அந்த இடத்திலேயே கைது செய்தனர். பணப் பரிமாற்றம் மற்றும் பழைய காதல் விவகாரமே இந்தத் துணிச்சலான கொலைக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.