“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

By Soundarya on சித்திரை 22, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆட்டோ ஓட்டுநரான சாகர் என்பவர், ரக்ஷிதா என்ற பெண்ணைக் காதலித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். ஆனால், ரக்ஷிதா தனது கணவரின் நண்பரான இந்திரா என்பவருடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். சாகரிடம் இந்திராவைத் தனது ‘சகோதரன்’ என்று அறிமுகம் செய்து பழகிய ரக்ஷிதா, திடீரென அவருடன் ஓடிப்போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டை விட்டு வெளியேறிய ரக்ஷிதா, வெறுங்கையுடன் செல்லாமல் வீட்டிலிருந்த ₹1 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 22 கிராம் தங்க நகைகளையும் எடுத்துச் சென்றுள்ளார். பின்னர், ஒரு கோவிலில் வைத்து தனது கணவரின் நண்பரான இந்திராவை ரக்ஷிதா திருமணம் செய்துகொண்டார். இது குறித்து சாகருக்குத் தெரியாத நிலையில், ரக்ஷிதா தனது புதிய திருமணப் புகைப்படங்களை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த சாகர் நிலைகுலைந்து போனதோடு, தனது மனைவியின் துரோகத்தை எண்ணி அதிர்ச்சியில் உறைந்தார்.

   

மனமுடைந்த சாகர் இது குறித்து மாண்டியா கிராமப்புற காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். “அவள் யாருடன் வேண்டுமானாலும் வாழட்டும், எனக்கு விவாகரத்து வேண்டும்; அதேசமயம் திருடிச் சென்ற நகைகளையும் பணத்தையும் திருப்பித் தர வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். காதல் மனைவி தனது நண்பருடனேயே ஓடிப்போனதை எண்ணி சாகரும் அவரது தாயாரும் கண்ணீர் வடிக்கும் காட்சிகள் காண்போரை நெகிழச் செய்துள்ளன. சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவம் “நண்பனைச் சகோதரன் என்று கூறி செய்த துரோகம்” என விவாதிக்கப்பட்டு வருகிறது.