அடக்கடவுள..! பால்கனி சுவரில் அமர்ந்து ரீல்ஸ் எடுத்த 14 வயது சிறுவன்… அடுத்த நொடியே அரங்கேறிய கொடூரம்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!

By Soundarya on சித்திரை 22, 2026

Spread the love

ஐதராபாத்தில் சமூக வலைதளத்திற்காக ‘ரீல்ஸ்’ (Reels) வீடியோ எடுக்க முயன்ற 14 வயது சிறுவன், அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஐதராபாத்தின் போரபண்டா பகுதியைச் சேர்ந்த முகமது சர்ப்ராஸ் என்ற 14 வயது சிறுவன், தனது நண்பர்களுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காக ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்திற்குச் சென்றுள்ளான். அங்கு பால்கனி சுவரில் அமர்ந்து சாகசம் செய்வது போல வீடியோ எடுக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளான்.

பலத்த காயமடைந்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். புகழுக்காகவும், லைக்குகளுக்காகவும் சிறுவர்கள் ஆபத்தான இடங்களில் வீடியோ எடுப்பது அதிகரித்துள்ளதையே இச்சம்பவம் காட்டுகிறது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வீடியோ எடுக்கச் சென்ற மற்ற நண்பர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

   

சமூக வலைதள மோகத்தால் இளம் தலைமுறையினர் தங்கள் உயிரைப் பணையம் வைப்பது தொடர்கதையாகி வருகிறது. உயரமான கட்டிடங்கள், ரயில் தண்டவாளங்கள் மற்றும் நீர்நிலைகளில் வீடியோ எடுப்பதைத் தவிர்க்குமாறு பெற்றோர்களுக்கும் இளைஞர்களுக்கும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஒரு சில நொடிகள் ஓடும் வீடியோவை விட உயிர் மேலானது என்பதை உணர வேண்டும்.