“ஐயோ காப்பாத்துங்க” லிப்டில் நுழைய முயன்ற மருத்துவர்… தலை துண்டானதால் அலறிய செவிலியர்… லிஃப்ட்டுக்குள் 15 நிமிடம் பகீர்… வைரலாகும் திக் திக் வீடியோ..!

By Soundarya on சித்திரை 21, 2026

Spread the love

2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஹிட்டோஷி நிகைடோ (Dr. Hitoshi Nikaidoh), லிஃப்ட் விபத்து ஒன்றில் மிகக் கொடூரமான முறையில் உயிரிழந்தார். அவர் லிஃப்ட்டிற்குள் நுழைய முயன்றபோது, அதன் கதவுகள் எதிர்பாராத விதமாக அவரது தோள்பட்டைகளை இறுக்கமாக கவ்விக்கொண்டன. அந்தச் சமயத்தில் லிஃப்ட் திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மேல்நோக்கி நகரத் தொடங்கியது. இதில் அவரது தலை கீழ் தாடை வரை துண்டிக்கப்பட்டு, உடல் நசுங்கிய நிலையில் அந்த இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தக் கொடூரமான விபத்தின்போது, அந்த லிஃப்ட்டிற்குள் ஒரு செவிலியர் சிக்கியிருந்தார். துண்டிக்கப்பட்ட டாக்டரின் தலையுடன் சுமார் 15 நிமிடங்கள் அந்தச் செவிலியர் லிஃப்ட்டிற்குள் மாட்டிக்கொண்டிருந்த சம்பவம், மருத்துவ வரலாற்றிலேயே ஒரு அதிர்ச்சிகரமான மற்றும் துயரமான நிகழ்வாகப் பதிவாகியுள்ளது.