“நடுரோட்டில் மாணவியின் கையைப் பிடித்த காமுகர்கள்… அடுத்த நிமிடமே போலீஸின் அதிரடி வேட்டை… அத்துமீறிய வாலிபர்களுக்கு விழுந்த ‘டோஸ்’… கதறவிடும் வீடியோ…!!!

By Muthu Mani on சித்திரை 20, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூரில் பள்ளி மாணவிகளைத் துன்புறுத்திய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவிகளை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த அந்த இளைஞர்கள், ஒரு மாணவியின் கையைப் பிடித்து இழுத்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்தது.

இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள காவல் அதிகாரி அபிமன்யு மங்ளிக், கோட்வாலி பகுதிக்குட்பட்ட ஐ.டி.ஐ சாலை அருகே நடைபெற்ற இந்த அராஜகம் தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். அவர்கள் மீது போக்சோ (POCSO) சட்டம் மற்றும் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டப்படியான உயர்மட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

   

இதற்கிடையில், காவல் நிலையத்தில் வைத்து குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்கள் இருவரும் கைகூப்பி மன்னிப்பு கேட்கும் மற்றொரு வீடியோவும் வெளியாகியுள்ளது. “தவறு செய்துவிட்டோம், இனி இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம்” என்று அவர்கள் கெஞ்சும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கை சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வரும் அதே வேளையில், இதுபோன்ற நபர்கள் மீது கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.