நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற மூன்று இளைஞர்கள், கையில் துப்பாக்கியுடன் சமூக வலைதளத்திற்காக ‘ரீல்ஸ்’ (Reels) செய்தபோது நேரிட்ட கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வண்டியைத் தாறுமாறாக ஓட்டிக்கொண்டு, ஒரு சில நொடிகள் ஓடும் வீடியோவிற்காக அவர்கள் செய்த சாகசம், அவர்களது உயிரையே பறித்துள்ளது.
அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக முன்னால் வந்த லாரி மீது கார் நேருக்கு நேர் மோதியது. இந்த பயங்கர விபத்தில் காரில் இருந்த மூன்று இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். வெறும் ஒரு சில நொடிகள் சமூக வலைதளங்களில் கிடைக்கும் ‘லைக்’குகளுக்காக, தங்கள் வாழ்நாளையே அவர்கள் இழந்துள்ளனர்.
रील के चक्कर में 3 जानें चली गई..!pic.twitter.com/kLYQDYGnzK
— मिच्च मसाला (@micchamasala) April 19, 2026
இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. சாலை என்பது சினிமா படப்பிடிப்புத் தளம் அல்ல, வாழ்க்கை என்பது விளையாட்டு அல்ல என்பதை உணர்த்தும் இந்த விபத்து, அந்த இளைஞர்களின் குடும்பங்களுக்கு ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதள மோகத்திற்காக உயிரைப் பணையம் வைக்கும் இத்தகையச் செயல்களுக்கு இப்போதே முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், இதுபோன்ற விபத்துகள் தொடர்கதையாகிவிடும்.
