“இப்ப இருக்கிற பழனிசாமியே வேற..” செந்தில் பாலாஜிக்கு எடப்பாடி விடுத்த மிரட்டல் அடி….! கரூர் மேடையில் அனல் பறந்த பேச்சு…!!

By Devi Ramu on சித்திரை 20, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் கரூரில் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவின் செந்தில் பாலாஜியை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். எந்தத் துறையைக் கொடுத்தாலும் அதில் ஊழல் செய்வதையே தொழிலாகக் கொண்டவர் என்று விமர்சித்த இபிஎஸ், தற்போது எதிரி பலவீனமடைந்து மாவட்டத்தை விட்டே ஓடிவிட்டதாகக் குறிப்பிட்டார். கரூரில் அதிமுகவின் செல்வாக்கை நிரூபிக்கவே நான்கு தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாகவும், திமுக மக்களை நம்பாமல் வெறும் கூட்டணியை மட்டுமே நம்பி இருப்பதாகவும் அவர் ஆவேசமாகப் பேசினார்.

 

   

கடந்த ஐந்தாண்டுகளில் அதிமுகவினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளுக்கு ஆட்சி மாறியதும் நிச்சயம் பதில் சொல்லப்படும் என்று எச்சரித்த அவர், பொய் வழக்கு போட்ட அதிகாரிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் கூறினார். “அப்போது இருந்த பழனிசாமி வேறு, இப்போது இருக்கும் பழனிசாமி வேறு” என்று எச்சரிக்கை விடுத்த அவர், அதிகாரத்தை வைத்து ஆட்டம் போட வேண்டாம் என்று செந்தில் பாலாஜிக்கு நேரடி சவால் விடுத்துள்ளார். கரூரில் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்த இபிஎஸ்ஸின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.