“அன்புமணி ஒரு ஒன்னாம் நம்பர் சோம்பேறி!… 10 நிமிட வீடியோவுக்காக ஒரு நாடகம்”… கிழித்து தொங்க விட்ட உண்மையை உடைத்த தங்கை ஸ்ரீகாந்தி…!!!

By Muthu Mani on சித்திரை 19, 2026

Spread the love

பாட்டாளி மக்கள் கட்சிக்குள் ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்திக்கும், மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையிலான குடும்பப் பூசல் தற்போது பகிரங்க மோதலாக வெடித்துள்ளது. தனது தந்தை ராமதாஸின் நிழலாகவே இருந்து வரும் ஸ்ரீகாந்தி, அண்ணன் அன்புமணி மற்றும் அண்ணி சௌமியா அன்புமணி மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது கூட, 30 கி.மீ தூரத்தில் இருந்த அன்புமணி வந்து பார்க்கவில்லை என்றும், சொத்து மற்றும் கட்சியைப் பறிக்கவே அவர்கள் திட்டமிடுவதாகவும் ஸ்ரீகாந்தி செய்தியாளர்களிடம் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியாக அன்புமணியை ஒரு “சோம்பேறி” என்று விமர்சித்துள்ள ஸ்ரீகாந்தி, மத்திய மந்திரி பதவி முடிந்த பிறகு மூன்று ஆண்டுகள் யாரையும் சந்திக்காமல் அன்புமணி வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததாகக் கூறியுள்ளார். மக்களின் கஷ்டங்களை அறிய கிராமங்களுக்குச் செல்ல அவர் விரும்புவதில்லை என்றும், தொண்டர்களைச் சந்திப்பதே கடினம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். கட்சி மற்றும் தந்தையைத் தனிமைப்படுத்த அன்புமணி தரப்பு முயன்றதாலேயே, தான் தற்போது களமிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் விளக்கியுள்ளார்.

   

இந்தக் குடும்ப விரிசலுக்குப் பின்னால் சௌமியா அன்புமணி இருப்பதாகக் குறிப்பிட்ட ஸ்ரீகாந்தி, ‘பிளான் A, B, C’ எனத் திட்டமிட்டு ஒவ்வொரு பதவிகளையும் அமைப்புகளையும் அவர் கைப்பற்றிக்கொண்டதாகச் சாடியுள்ளார். பசுமைத் தாயகம், மக்கள் தொலைக்காட்சி என அனைத்தையும் பிடுங்கிக்கொண்டதோடு, தேர்தல் ஆணையத்திடம் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து கட்சியைப் பறித்துக் கொண்டதாகவும் அவர் பகிரங்கமாகப் புகார் கூறியுள்ளார். பதவி மற்றும் பண ஆசைக்காகத் தனது தந்தையை அவர்கள் மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வதைப்பதாக ஸ்ரீகாந்தி வேதனை தெரிவித்துள்ளார்.

   

தற்போது பாமகவில் 90 சதவீத நிர்வாகிகள் தன்னிடம் இருப்பதாக அன்புமணி கூறுவது பொய் என்று மறுத்துள்ள ஸ்ரீகாந்தி, ராமதாஸ் சுயமாக 108 மாவட்டச் செயலாளர்களை நியமித்துக் கட்சியை மீண்டும் கட்டி எழுப்பி வருவதாகக் கூறியுள்ளார். தந்தை மயக்கமடைந்து ஆம்புலன்சில் சென்றபோது வராதவர்கள், இப்போது தேர்தல் ஓட்டுக்காக நாடகமாடுவதாகச் சாடியுள்ளார். பாமகவின் இந்த உட்கட்சி மோதல் மற்றும் வாரிசுப் போர் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.