ITI, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஜாக்பாட்… ₹74,000 வரை சம்பளம்… பவர் கிரிட் நிறுவனத்தில் 660 பணியிடங்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

By Muthu Mani on சித்திரை 19, 2026

Spread the love

இந்தியாவின் முன்னணி மின்பகிர்மான நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (POWERGRID), தற்போது 660 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் டிப்ளமோ டிரெய்னி (எலெக்ட்ரிக்கல், சிவில், சர்வே), ஜூனியர் ஆபிசர் டிரெய்னி (HR, F&A) மற்றும் ஜூனியர் டெக்னீசியன் டிரெய்னி (சர்வே) ஆகிய பல்வேறு பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.powergrid.in வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வரும் ஏப்ரல் 20, 2026 முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கி, மே 11, 2026 அன்று நிறைவடைகிறது.

கல்வித் தகுதியும் மதிப்பெண் நிபந்தனைகளும்

   

பதவிகளுக்கு ஏற்றவாறு ஐடிஐ, டிப்ளமோ, பி.பி.ஏ, பி.பி.எம் மற்றும் சி.ஏ/சி.எம்.ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரிக்கல் மற்றும் சிவில் டிப்ளமோ டிரெய்னி பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், சம்பந்தப்பட்ட துறையில் மூன்று வருட முழுநேர டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பொது, ஓபிசி மற்றும் இடபிள்யூஎஸ் பிரிவினர் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்ச்சி மதிப்பெண்களே போதுமானது. முக்கியமாக, டிப்ளமோ பணிகளுக்கு பி.இ, பி.டெக் அல்லது எம்.டெக் போன்ற உயர் தொழில்நுட்ப பட்டங்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

   

வயது வரம்பு மற்றும் ஊதிய விவரங்கள்

 

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 11.05.2026 அன்றைய நிலவரப்படி கணக்கிடப்படும். அனைத்து பதவிகளுக்கும் அதிகபட்ச வயது வரம்பு 27 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி (NCL) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் பிரிவைப் பொறுத்து 10 முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வுகள் அளிக்கப்படும். தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ஆரம்ப ஊதியமாக மாதம் ரூ. 21,500 முதல் ரூ. 74,000 வரை வழங்கப்படும்.

தேர்வு முறை மற்றும் விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு (CBT) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். அதனைத் தொடர்ந்து பதவிகளுக்கு ஏற்ப கணினி திறன் தேர்வு அல்லது தொழிற் தேர்வு (Trade Test) நடத்தப்படும். விண்ணப்பக் கட்டணமாக டிப்ளமோ மற்றும் ஜூனியர் ஆபிசர் டிரெய்னி பதவிகளுக்கு ரூ.300-ம், ஜூனியர் டெக்னீசியன் டிரெய்னி பதவிக்கு ரூ.200-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தகுதியான இளைஞர்கள் இந்த மத்திய அரசு வேலைவாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.