ஏர்பிஎன்பி (Airbnb) தங்கும் விடுதி ஒன்றில் தங்கிய வாடிக்கையாளர்கள், அந்த இடத்தைப் போர்க்களம் போல மிக மோசமாகச் சிதறடித்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உணவுக் கழிவுகள், தரையிலும் சுவரிலும் படிந்த கறைகள் மற்றும் துர்நாற்றம் என அந்த அறையே அசுத்தமாகக் காணப்பட்டது. இதைப் பார்த்த விடுதி உரிமையாளர் மிகுந்த மனவேதனைக்கு உள்ளானதுடன், தனது வீட்டை இவ்வளவு மோசமாக வைத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அறை அசுத்தமாக இருப்பது குறித்து அந்த வாடிக்கையாளர்களிடம் கேட்டபோது, அவர்கள் மிகவும் பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ளனர். “நாங்கள் தூய்மைப்படுத்துவதற்கான கட்டணத்தைச் (Cleaning Charges) செலுத்திவிட்டோம், பிறகு ஏன் இந்த நாடகம்?” என்று அவர்கள் வாதிட்டுள்ளனர். தங்குமிடத்தைச் சுத்தமாக வைத்திருப்பது அடிப்படைப் பண்பு என்பதை மறந்து, பணம் கட்டிவிட்டதால் எதையும் செய்யலாம் என்ற அவர்களது போக்கு விடுதி உரிமையாளரை மேலும் அதிருப்தி அடையச் செய்தது.
She is an Airbnb host in India.
She shares how guests leave her property and how most Indians consider Airbnb as just a party place and leave unbelievable mess sometimes. “We are paying cleaning charges na”.
True. I judge people on how they leave behind hotel rooms too.
Why?… pic.twitter.com/5vPoHEK2yP
— Siddharth's Echelon (@SiddharthKG7) April 16, 2026
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே பெரிய விவாதம் எழுந்துள்ளது. “சுத்தம் செய்வது என்பது பணம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல, அது சக மனிதர்களுக்குத் தரும் மரியாதை” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சுத்தம் செய்யும் பணியாளர்கள் இயந்திரங்கள் அல்ல, அவர்களும் மனிதர்களே என்பதை உணர்ந்து வாடிக்கையாளர்கள் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
