உன் பொண்டாட்டிக்கு கால் பவுன்ல தாலி கட்ட துப்பில்லை… இதுல மானங்கெட்ட பொழப்பு வேற… இலவச திட்டங்களை கிழித்தெடுத்த சீமான்…!!

By Soundarya on சித்திரை 18, 2026

Spread the love

தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகே நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசின் இலவசத் திட்டங்களை, குறிப்பாக தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தைக் கடுமையாகச் சாடினார். “தன் மனைவியின் கழுத்தில் ஒரு அரை பவுன் தாலி கூட கட்ட முடியாத நிலையில் ஒருவன் இருப்பது மானக்கேடானது” என்று குறிப்பிட்ட அவர், பிறர் தரும் தங்கத்தை வாங்கி தாலி கட்டுவதற்குப் பதில், உழைத்துச் சம்பாதித்து தன்மானத்தோடு வாழ வேண்டும் என்று பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

தமிழர்கள் எவரையும் சாராமல் தற்சார்பு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று முழங்கிய சீமான், அரசு வழங்கும் இலவசங்களுக்காகக் கையேந்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தினார். “உன் பிள்ளைக்கு நீதான் மோதிரம் போட வேண்டும், ஊரான் கொடுத்ததைப் போடாதே” என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய அவர், தற்சார்பு பொருளாதாரம் ஒரு மனிதனின் கௌரவத்தை எப்படிக் காக்கும் என்பதைத் தனது பாணியில் விளக்கினார்.

   

மேலும், தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்திற்காகச் செலவிடப்படும் லட்சக்கணக்கான ரூபாய்களைச் சேமிக்க வழிவகை செய்யப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். “தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் மூன்று லட்சம் ரூபாய் வரை பறிப்பார்கள்; அந்தப் பணத்தை மிச்சப்படுத்தினால், அதைக் கொண்டே உங்கள் பிள்ளைக்கு மூன்று பவுனில் மோதிரம் போட முடியும்” என்று குறிப்பிட்ட அவர், தரமான இலவச மருத்துவச் சேவையின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.