கில்லி ‘செல்லம்’ இப்போ எதிரி…! “விசில் அடிக்கலாம்.. நாட்டை ஒப்படைக்க முடியாது…” விஜய்யை வெளுத்து வாங்கிய பிரகாஷ் ராஜ்…!!

By Devi Ramu on சித்திரை 17, 2026

Spread the love

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாகச் சாடியுள்ளார். ரசிகர்கள் ஒரு நடிகருக்காக விசில் அடிக்கலாமே தவிர, நாட்டின் எதிர்காலத்தை அவரிடம் ஒப்படைத்துவிட முடியாது என்று கூறிய அவர், மொழி மற்றும் இனப் போராட்டங்களின் போது விஜய் எப்போதாவது குரல் கொடுத்ததுண்டா என வினவினார். சினிமா மாடலுக்கும் நிஜ அரசியலுக்கும் வித்தியாசம் இருப்பதை மக்கள் உணர வேண்டும் என்றும், மக்களின் அன்பைத் தவறாகப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்ற முயலக் கூடாது என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்தார்.

பாஜக மதுரையை மணிப்பூர் ஆக்க முயல்வதாகவும், அவர்களுக்கு மதம் முக்கியமல்ல அதிகாரம் தான் முக்கியம் என்றும் விமர்சித்த பிரகாஷ் ராஜ், அதனைத் தடுக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கோரினார். இதற்கிடையில், திமுக தரப்பும் விஜய்யின் மத அடையாளத்தைச் சுட்டிக்காட்டி விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. கில்லி போன்ற படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தாலும், அரசியல் என்று வரும்போது தேச நலனுக்காகத் தனது நிலைப்பாட்டைத் தெளிவாகப் பதிவு செய்துள்ள பிரகாஷ் ராஜின் இந்த உரையாடல் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.