தவறான கணவர், குடும்பத் தகராறு மற்றும் புகுந்த வீட்டாரின் தொல்லைகளால் மனமுடைந்த ஒரு பெண், தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். அந்தச் சமயத்தில்தான் அவரது வாழ்க்கையில் ‘ராகுல்’ என்ற பெயரில் ஒரு நபர் அறிமுகமாகியுள்ளார். தன்னை ஒரு கனவு நாயகனாகக் காட்டிக்கொண்ட அந்த நபர், அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்துள்ளார்.
திருமணத்திற்கு முன்பே ஒரு விடுதியில் (OYO) தங்கலாம் என்றும், முதலிரவுக்கான பயிற்சியாக இது இருக்கும் என்றும் கூறி ராகுல் அப்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு சென்ற பிறகுதான் அந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராகுல் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அந்த நபரின் உண்மையான பெயர் ‘ஆதில் கான்’ என்பது தெரியவந்தது. தனது அடையாளத்தை மறைத்துப் பழகியதைக் குறித்து அந்தப் பெண் கேள்வி எழுப்பியபோது, ஆதில் கானின் கோர முகம் வெளிப்பட்டுள்ளது.
அப்பெண்ணை ஒரு அறையில் வைத்து சுமார் 15 நாட்கள் சட்டவிரோதமாகச் சிறைபிடித்த ஆதில் கான், அவரைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு மிகக் கொடூரமாகத் தாக்கியும் உள்ளார். ஒருகட்டத்தில் கொன்று சூட்கேஸில் அடைக்கப்பட இருந்த நிலையில், அந்தப் பெண் எப்படியோ அங்கிருந்து தப்பித்துள்ளார். தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், தனக்கு நேர்ந்த இந்தத் துயரச் சம்பவத்தை கண்ணீருடன் விவரித்துள்ளார்.
