“இந்த போட்டோவை பாருங்க” எப்படி இருக்கு..? மணமகன் வீட்டுக்கு அனுப்பி வைத்த காதலன்… அவமானம் தாங்காமல் கிணற்றில் குதித்து மணப்பெண் தற்கொலை..!!

By Soundarya on சித்திரை 15, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம், பந்தலா கிராமத்தில் முன்னாள் காதலனின் வக்ர புத்தியால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயஸ்ரீ (22) என்ற அந்தப் பெண்ணிற்கு வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி திருமணம் நடைபெற நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்தத் திருமணத்தைத் தடுக்கும் நோக்கில், அவரது முன்னாள் காதலன் ஸ்ரீசைல், தாங்கள் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்களை மணமகன் வீட்டாருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் வீட்டார் திருமணத்தை ரத்து செய்தனர்.

திருமணம் நின்றதால் மிகுந்த மனவேதனை அடைந்த ஜெயஸ்ரீ, சமூகத்தில் ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமல் ஊர்க் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். ஒரு பெண்ணின் வாழ்க்கையோடு விளையாடிய ஸ்ரீசைலின் இந்தச் செயல் அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிந்தகி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஸ்ரீசைலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.