தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 16-ஆம் தேதியுடன் இறுதித்தேர்வுகள் நிறைவடையும் நிலையில், இன்று தேர்வுகள் ஏதும் இல்லாததால் மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தேர்தல் பணிகளில் ஈடுபடாத ஆசிரியர்கள் இந்த விடுமுறைப் பட்டியலில் இடம்பெறவில்லை.
அவர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வருகை தந்து தங்களின் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. தேர்தல் கடமைகளில் இல்லாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதால், மாணவர்கள் இல்லாத நிலையிலும் பள்ளிகள் இன்று ஆசிரியர்களுடன் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
