“உங்களுக்கு பிடித்த விலங்கு எது?”… ஆட்டோ டிரைவர் சொன்ன பதிலால் சிரிப்பலையில் மூழ்கிய இணையதளம்… விசித்திரமான ஆட்டோ பயணம்… வைரல் வீடியோ…!!

By Rajeshwari on சித்திரை 14, 2026

Spread the love

இலங்கையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம் அளித்த நகைச்சுவையான பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெளிநாட்டு பெண் பயணி ஒருவர் ஆட்டோவில் பயணம் செய்தபோது, அந்த ஓட்டுநரிடம் “உங்களுக்குப் பிடித்த விலங்கு எது?” என்று ஒரு சாதாரண கேள்வியைக் கேட்டுள்ளார். அதற்கு சற்றும் யோசிக்காமல் அந்த ஓட்டுநர் “சிக்கன்”என்று பதிலளித்தார்.

இந்நிலையில் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், கோழி என்பது ஒரு உணவுப் பொருள் என்று சிரித்தபடியே சுட்டிக்காட்டினார். தன்னுடைய தவறை உணர்ந்த அந்த ஓட்டுநர் உடனே சுதாரித்துக் கொண்டு, “இல்லை இல்லை, எனக்கு நாய் தான் பிடிக்கும், என்னிடம் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் உள்ளது” என்று கூறி சமாளித்தார்.

   

 

View this post on Instagram

 

A post shared by Birdie 🕊️ (@likeabirdie___)

   

“>

 

மேலும் உடனே அந்தப் பெண் வேடிக்கையாக “ஆனால் நீங்கள் நாயைச் சாப்பிடமாட்டீர்கள் தானே?” என்று கேட்க, அவரும் சிரித்துக் கொண்டே மறுத்தார். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ 2.3 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. “கோழி எப்போது விலங்குகள் பட்டியலில் வந்தது, அது மெனு கார்டில் அல்லவா இருக்கும்?” என்று நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து சிரித்து வருகின்றனர்.