அடேங்கப்பா…. தளபதி 67 படத்தில் இத்தனை வில்லன்களா?…. அதுவும் பிரபல இயக்குனரும்….. லீக்கான தகவல்….!!!!

By admin

Published on:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் விஜய். இவரின் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் கொடுக்கும். அவ்வகையில் இவரின் அடைப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பீஸ்ட். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு ஓடவில்லை.

   

இதனைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். மிகப்பெரிய எதிர்பார்ப்பை எதிர வைத்து வரும் இந்த திரைப்படம் வருகின்ற 2003 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் மற்றும் பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை முடித்த கையோடு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் கௌதம் மேனன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் அவர் ஒரு கேங்ஸ்டார் ஆக நடிக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் இந்தப் படத்தில் 4 வில்லன்கள் இருக்கிறார்களாம். அதில் ‘கேஜிஎப் 2’ படத்தில் ஆதிராவாக மிரட்டிய நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் பிரித்விராஜ் இருவரும் இணைந்துள்ளார்களாம். மேலும் நடிகர் ஆக்க்ஷன் கிங் அர்ஜூன் இணைய இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. தளபதி 67 படத்திற்கான பணிகளை லோகேஷ் கனகராஜ் தொடங்கியுள்ளார். இந்தத் திரைப்படம் லோகேஷ் சினிமா மேட்டிக் யுனிவர்சில் இடம்பெருமா என ரசிகர்களின் கேள்விக்கு விரைவில் விடை கிடைக்கும் என தெரிகிறது.