செம குட் நியூஸ்..! இனி காசு இல்லாமலே IPL பார்க்கலாம்.. ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு பம்பர் ஆஃபர்..!!

By Soundarya on சித்திரை 14, 2026

Spread the love

நடப்பு ஐபிஎல் தொடரை முன்னிட்டு, ஏர்டெல் தனது குறிப்பிட்ட பயனர்களுக்கு 90 நாட்களுக்கான JioHotstar சந்தாவை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனுடன் கூடுதலாக 12GB இலவச டேட்டா பலன்களையும் பயனர்கள் பெற முடியும். இந்தச் சலுகையைப் பெற விரும்பும் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள Airtel Thanks App-ஐத் திறந்து, அதில் உள்ள ‘Rewards & Offers’ பகுதிக்குச் சென்று தங்களுக்கு இந்தச் சலுகை கிடைத்துள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

இந்தச் சலுகையானது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதால், அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களும் இதைப் பெற இயலாது. மேலும், இதைப் பெறுவதற்கு எந்தவிதமான கூப்பன் குறியீடும் தேவையில்லை; தகுதியுள்ள பயனர்கள் நேரடியாக ‘Claim Now’ பொத்தானை அழுத்திப் பலன்களைப் பெற்றுக் கொள்ளலாம். இது தவிர, ₹48 போன்ற குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களிலும் ஒரு மாத காலத்திற்கான JioHotstar சந்தா மற்றும் கூடுதல் டேட்டா வசதிகள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.