தூத்துக்குடி அருகே கோட்டூர் விலக்கு பகுதியில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, சென்னை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த கார், சாலையோரம் நின்றிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் பாஸ்கரன், அவரது மனைவி வனிதா, கார் ஓட்டுநர் பழனி மற்றும் வசந்தி ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த பாஸ்கரனின் இரண்டு குழந்தைகள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மகிழ்ச்சியுடன் தொடங்கிய புத்தாண்டுப் பயணம், நான்கு பேரின் உயிரைப் பறித்த துயர சம்பவமாக முடிந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
