டிரம்ப் வைத்த செக்!… “எங்களிடம் மோதினால் இதுதான் கதி!”… ஈரானை முற்றிலுமாக அழிக்க அமெரிக்கா போடும் மெகா பிளான்… உலக நாடுகளுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி…!!!

By Muthu Mani on சித்திரை 13, 2026

Spread the love

ஈரான் அணுசக்தி உற்பத்தியைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் அந்த நாட்டின் மீது போர் தொடுத்தன. ஈரானின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றி அந்நாட்டை பணிய வைக்கலாம் என்பது அமெரிக்காவின் திட்டமாக இருந்தது. ஆனால், அமெரிக்காவின் கணிப்புகளைத் தவிடுபொடியாக்கும் வகையில் ஈரான் ஆக்ரோஷமாகத் திருப்பித் தாக்கியதுடன், அமெரிக்காவிற்கு ஆதரவாக நின்ற வளைகுடா நாடுகளையும் இலக்கு வைத்தது. இதனால் போர் சூழல் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இப்போரின் ஒரு பகுதியாக ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்மூஸ் நீரிணையை மூடியது, உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எண்ணெய் விநியோகம் தடைபட்டதால் உலகப் பொருளாதாரம் மந்தநிலையைச் சந்தித்தது. நீரிணையைத் திறக்கத் தவறினால் ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் உள்நாட்டுப் பாலங்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும், ஈரான் தனது நிலையில் உறுதியாக இருந்து அமெரிக்காவின் மிரட்டல்களுக்குப் பணிய மறுத்துவிட்டது.

   

பாகிஸ்தானின் தலையீட்டால் ஹோர்மூஸ் நீரிணையைத் திறக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இரு நாடுகளும் இரண்டு வார காலப் போர் நிறுத்தத்திற்குச் சம்மதித்தன. இதனைத் தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில், அணுசக்தி உற்பத்தியை ஈரான் முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்கவில்லை. இதன் காரணமாகப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தும் அபாயம் அதிகரித்துள்ளது.

   

தற்போதைய நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அணுசக்தி மோகத்தால் ஈரானின் முக்கியத் தலைவர்கள் உயிரிழந்துவிட்டதாகவும், விரைவில் ஈரான் மீதான முழுமையான முற்றுகை தொடங்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மற்ற நாடுகளின் பங்களிப்புடன் ஈரானின் எஞ்சியிருக்கும் பகுதிகளையும் அமெரிக்க ராணுவம் விரைவில் அழித்துவிடும் என அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.