“மகாகும்ப மேளா வைரல் பெண்ணை காணவில்லை” கணவர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ… “அவளைக் கடத்திட்டாங்க” என கதறும் பெற்றோர்… திருமணத்திற்குப் பின் நேர்ந்த திடுக்கிடும் திருப்பம்..!!

By Soundarya on சித்திரை 13, 2026

Spread the love

பிரயாக்ராஜ் மகாகும்ப மேளாவின் மூலம் சமூக வலைதளங்களில் வைரலான மோனாலிசா போஸ்லே, பர்மான் என்பவரைத் திருமணம் செய்த பிறகு தற்போது மர்மமான முறையில் மாயமாகியுள்ளார். மோனாலிசா தன்னை விட்டு ஓடிவிட்டதாக பர்மான் ஒரு வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், இது திட்டமிட்ட சதி என்றும் தனது மகளை பர்மான் தான் கடத்தி வைத்துள்ளார் என்றும் மோனாலிசாவின் தாய் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மோனாலிசாவின் தாய் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகளுடன் பேச முயன்றபோது பர்மான் அவளது கையில் இருந்த மொபைல் போனைப் பிடுங்கிக் கொண்டதாகவும், அதன் பிறகு அவளுடன் பேச முடியவில்லை என்றும் அழுதுகொண்டே தெரிவித்தார். தனது மகள் ஒரு மைனர் (சிறுமி) என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதால், பர்மான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்துறையின் பிடி இறுகுவதைத் தெரிந்தே, மோனாலிசா மாயமானதாக பர்மான் நாடகமாடுவதாக மோனாலிசாவின் பெற்றோர் அஞ்சுகின்றனர்.

   

இந்தச் சம்பவம் மோனாலிசாவின் சொந்த ஊரான மகேஸ்வரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பர்மான் தனது வீடியோவில், மோனாலிசாவை அஜ்மீர் மற்றும் ஜோத்பூர் பகுதிகளில் தேடி வருவதாகக் கூறி மக்களின் உதவியைக் கோரியுள்ளார். ஆனால், மகாராஷ்டிராவின் இந்த ‘வைரல் கேர்ள்’ காணாமல் போனதன் பின்னணியில் ஏதோ பெரிய மர்மம் இருப்பதாகக் கருதும் போலீசார், விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.