“சசிகலா காலில் விழுந்த எடப்பாடி”.. மேடையில் புகைப்படத்தைக் காட்டி அதிரவைத்த உதயநிதி… ‘லேமினேஷன்’ வியூகத்தில் சிக்கிய இபிஎஸ்…!!!

By Rajeshwari on சித்திரை 11, 2026

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இடையிலான அரசியல் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சார மேடைகளில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசி வருவதாகவும், தனிநபர் விமர்சனங்களை முன்வைப்பதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த தேர்தலில் ‘எய்ம்ஸ் செங்கல்’ அஸ்திரத்தைக் கையாண்ட உதயநிதி, இந்த முறை எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழுந்து தவழ்ந்த பழைய புகைப்படத்தை லேமினேஷன் செய்து மக்கள் மத்தியில் காட்டி வருகிறார். “இவர் எப்படி முதல்வரானார் பாருங்கள்” என்று உதயநிதி கிண்டலாகப் பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

இந்த அரசியல் யுத்தம் அதிமுக தொண்டர்களிடையே ஒருவித அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக அரசின் குறைகளையும், கடந்த கால அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகம், குடிமராமத்துத் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்களையும் முன்னிறுத்திப் பேசுவதை விட்டுவிட்டு, தேவையற்ற தனிநபர் விமர்சனங்களில் ஈடுபடுவது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என ரத்தத்தின் ரத்தங்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

   

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி விமர்சனப் போக்கு அவருக்கு வெற்றியைத் தேடித்தருமா அல்லது உதயநிதியின் புகைப்பட வியூகத்தால் அதிமுகவுக்கு 11-வது தொடர் தோல்வி காத்திருக்கிறதா என்பது தேர்தல் முடிவுகளில்தான் தெரியவரும்.