“சூட்கேஸை திறந்ததும் அலறிய அதிகாரிகள்”… மலேசியாவிலிருந்து வந்த ‘விஷ’ பார்சல்.. 30 வயது இளைஞர் சிக்கியது எப்படி?… சென்னை ஏர்போர்ட் பரபரப்பு…!

By Rajeshwari on சித்திரை 11, 2026

Spread the love

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில், அரிய வகை உயிரினங்களைக் கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவரைச் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். சுற்றுலா விசாவில் வெளிநாடு சென்று திரும்பிய அந்த நபரின் உடைமைகளைச் சோதித்தபோது, அதில் சுமார் 34 அரிய வகை உயிரினங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இது குறிப்பாக, கலிபோர்னியாவின் ராஜ நாகங்கள், நல்ல பாம்புகள், நீல நாக்கு பாம்புகள் மற்றும் நீர் உடும்புகள் உள்ளிட்ட உயிரினங்கள் உயிருடன் மீட்கப்பட்டன. அதேபோல், தாய்லாந்தில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸை அதிகாரிகள் சோதித்தபோது, அதில் அரிய வகை குரங்குகள், இந்தியப் பனை அணில்கள் மற்றும் விஷ வண்டுகள் என மேலும் 15 உயிரினங்கள் கண்டெடுக்கப்பட்டன.

   

இதனால் மொத்தம் 49 உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், உரிய அனுமதியின்றி கொண்டு வரப்பட்டதால் அவை அனைத்தும் மீண்டும் அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய அளவிலான வனவிலங்கு கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.