தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சித் தொண்டர்களுக்கு முதன்முறையாக எழுதியுள்ள உணர்ச்சிகரமான மடல், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே” என உருக்கமாகத் தொடங்கும் அந்தப் கடிதத்தில், தமிழகத்தில் ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தை உருவாக்குவதற்கான முதன்மைச் சக்தியாகத் தங்கள் கழகம் உருவெடுத்துள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நாள் நெருங்கி வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அடுத்த பத்து நாட்கள் மிகவும் முக்கியமானவை என்றும், காலை மற்றும் மாலை வேளைகளில் தொண்டர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களை நேரில் சந்தித்து “விசில்” சின்னத்திற்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்றும் அன்புடன் கட்டளையிட்டுள்ளார்.
இந்தத் தேர்தல் என்பது வெறும் வாக்குப் பதிவு மட்டுமல்ல, ஒரு தலைமுறைக்கான மாற்றத்தை நோக்கிய பயணம் என்பதைத் தொண்டர்கள் மக்களிடம் ஆழமாகப் புரிய வைக்க வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, தன்னலமற்ற உழைப்பைச் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது” என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ள அவர், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் உண்மையான மக்களாட்சியை நிலைநாட்டி, வெற்றியை நிச்சயம் வசப்படுத்தலாம் எனத் தனது கடிதத்தின் வாயிலாகத் தொண்டர்களுக்கு உற்சாகம் ஊட்டியுள்ளார்.
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
வாகை சூடும் வரலாறு திரும்பும் பயணத்தில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அளப்பரியது, இன்றியமையாதது. மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியான நாம், நமது வெற்றிப் பாதையில் சரியாகப் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.
தேர்தல் நாள் வேகமாக…
— TVK Vijay (@TVKVijayHQ) April 11, 2026
