லீக்கான ‘ஜனநாயகன்’ படம்… விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு வந்த சோதனை… தளபதியின் அதிரடி முடிவு..?

By Rajeshwari on சித்திரை 11, 2026

Spread the love

தமிழக அரசியல் களம் தற்போது மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது. குறிப்பாக, நடிகர் விஜய் தனது சினிமா பயணத்தை விடுத்து முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். இந்தச் சூழலில், எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் கசிந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பலரின் உழைப்பில் உருவான இத்திரைப்படம் சட்டவிரோதமாக லீக் ஆனதற்கு திரையுலகினர் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திருச்சியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு விமான நிலையம் வந்தடைந்த விஜய்யிடம், ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஆன்லைனில் கசிந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அந்த கேள்விக்கு அவர் எந்த ஒரு பதிலும் அளிக்காமல் மௌனமாக அங்கிருந்து கடந்து சென்றார்.

   

ஏற்கனவே அரசியல் வருகையால் பல சவால்களைச் சந்தித்து வரும் விஜய், தனது படத்தின் லீக் குறித்த கேள்விக்கு ரியாக்ஷன் ஏதும் காட்டாமல் சென்றது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. அதே சமயம், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட சிலர் இந்தத் திரைப்படம் இணையத்தில் கசியக் காரணமானவர்கள் யார் என்பது குறித்த புகார்களை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.