“15 வருஷமா எங்களுக்கு என்ன செஞ்சீங்க..?” ஓட்டு மட்டும் கேட்க வாரிங்க.. அதிமுக வேட்பாளரை விரட்டியடித்த பெண்கள்… பெரும் பரபரப்பு..!!

By Soundarya on சித்திரை 11, 2026

Spread the love

நிலக்கோட்டை தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த அதிமுக வேட்பாளர் தேன்மொழி, தனது தேர்தல் பிரசாரத்தின் முதல் நாளிலேயே பொதுமக்களின் கடும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக இத்தொகுதியில் அதிமுகவே வெற்றி பெற்று வரும் நிலையில், அடிப்படை வசதிகள் குறித்து கேள்வி எழுப்பிய கிராம மக்களுக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மெட்டூர் பகுதியில் பிரசாரம் செய்தபோது, 15 ஆண்டுகளாகச் சாலைகள் சீரமைக்கப்படவில்லை என்றும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் பொதுமக்கள் ஆவேசமாக முறையிட்டனர்.

மக்களின் நியாயமான கேள்விகளால் ஆத்திரமடைந்த அதிமுக நிர்வாகிகள், வேட்பாளர் தேன்மொழி முன்னிலையிலேயே கேள்வி கேட்ட இரண்டு நபர்களை எட்டி உதைத்துத் தாக்கினர். நிலைகுலைந்து கீழே விழுந்தவர்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த ஊர் பெண்கள், தாக்குதலில் ஈடுபட்ட அதிமுகவினரை விரட்டியடித்தனர். இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், தனது கண்முன்னே நடந்த தாக்குதலைக் கண்டுகொள்ளாத தேன்மொழி, தொடர்ந்து பேசிக்கொண்டே அடுத்த இடத்திற்குச் சென்றது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

   

இதனைத் தொடர்ந்து கமலாபுரம் பிரிவு பகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோதும், 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வருவதாகப் பொதுமக்கள் தேன்மொழியைச் முற்றுகையிட்டனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காதது குறித்து மக்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பியதால், அதற்குப் பதில் அளிக்க முடியாமல் திணறிய வேட்பாளர் தேன்மொழி மழுப்பலான பதில்களைக் கூறிவிட்டுப் பிரசாரத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு கிளம்பிச் சென்றார். திமுக சார்பில் முதன்முறையாக ஒரு பெண் வேட்பாளர் களம் காணும் நிலையில், சிட்டிங் எம்எல்ஏவுக்கு எதிராக நிலவும் இந்த மக்கள் எதிர்ப்பு தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் எனக் கருதப்படுகிறது.