BIG BREAKING: ஈரான் மீது மீண்டும் தாக்குதல்.. இரவில் உச்சக்கட்ட பரபரப்பு….!

By Nanthini on சித்திரை 11, 2026

Spread the love

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் தொடங்க இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், அதிபர் டிரம்ப் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஈரான் ஒரு சுமூகமான உடன்பாட்டிற்கு முன்வராவிட்டால், அந்த நாட்டின் மீது மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்தப்படும் என அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துவிட்டு, மறுபுறம் போர் மிரட்டல் விடுக்கும் டிரம்பின் இந்த முரண்பாடான அணுகுமுறை, சமரச முயற்சிகளில் பின்னடைவை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு உலக நாடுகளின் கடுமையான விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளது. இத்தகைய பதற்றமான சூழலில் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவு என்னவாகும் என்பதே இப்போது உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.