இனி சிலிண்டரே வேண்டாம்… 4 லட்சம் இந்தியர்கள் எடுத்த அதிரடி முடிவு… இல்லத்தரசிகளுக்கு கிடைத்த செம குட் நியூஸ்…!!!

By Rajeshwari on சித்திரை 10, 2026

Spread the love

சர்வதேச சந்தையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் சமையல் எரிவாயுவின் மீதான தேவையைக் குறைக்க இந்திய அரசு குழாய் மூலம் விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயு திட்டத்தைச் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஐந்து வாரங்களில் மட்டும் இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் எல்பிஜி சிலிண்டர்களிடமிருந்து விடைபெற்று, பிஎன்ஜி இணைப்பிற்கு மாறியுள்ளனர்.

இந்நிலையில் மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக சமையல் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்கவும், வீடுகளுக்குத் தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யவும் அரசு இந்த அதிரடி மாற்றத்தை முன்னெடுத்துள்ளது.

   

இதனால் சுமார் 4.41 லட்சம் புதிய நுகர்வோர்கள் இதற்காகப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இயற்கை எரிவாயு விநியோகத்தைப் பொறுத்தவரை, வீட்டு உபயோகத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம், தொழிற்சாலைகள் மற்றும் உரத் துறைகளுக்கும் தடையின்றி எரிவாயு வழங்கப்பட்டு வருவதால் நாட்டின் பொருளாதாரம் சீராக இயங்கி வருகிறது.

   

மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவும் வகையில் 5 கிலோ சிலிண்டர்களின் விநியோகம் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு முகாம்கள் மூலம் மக்களிடையே இந்த மாற்றம் குறித்துத் தெளிவான புரிதல் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் போன்ற பிரச்சனைகளிலிருந்து சாமானிய மக்களுக்குத் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.