“என் கணவரை என்கிட்ட இருந்து பிரிச்சிடாதீங்க” அவரு தூங்கிட்டு இருக்காரு… கணவன் சடலத்தை தழுவி கதறிய மனைவி… காண்போரை கலங்கவைத்த சம்பவம்..!!

By Soundarya on சித்திரை 10, 2026

Spread the love

பெங்களூருவில் உயிரிழந்த கணவரின் உடலைத் தழுவிக்கொண்டு, அவர் தூங்குவதாகக் கூறி மனைவி நடத்திய பாசப் போராட்டம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த சிரில் மோனிஸ் என்பவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த நிலையில், இது குறித்து அவரது குடும்பத்தினர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள், உயிரிழந்த சிரில் மோனிஸின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர்.

ஆனால், கணவர் இறந்துவிட்டதை ஏற்க மறுத்த அவரது மனைவி, அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாகக் கூறி உடலை எடுக்க விடாமல் தடுத்து கண்ணீர் வடித்தார். “எனது கணவரை என்னிடமிருந்து பிரித்து விடாதீர்கள், அவர் தூங்கிக் கொண்டிருக்கிறார்” என்று அவர் அதிகாரிகளிடம் கெஞ்சிய உருக்கமான காட்சி காண்போரை நிலைகுலையச் செய்தது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, போலீசார் அவருக்கு ஆறுதல் கூறி தகுந்த முறையில் உடலை மீட்டுச் சென்றனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.