இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்தது படக்குழுவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முதல்முறையாக மௌனம் கலைத்துள்ள எச். வினோத், படத்தின் காட்சிகள் ரிலீஸ்க்கு முன்பே லீக்காவது ஈடு செய்ய முடியாத வலியைத் தருவதாக மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு காட்சியும் பலருடைய நீண்ட கால உழைப்பையும், கனவையும் சுமந்து நிற்பதாக அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, கசிந்த காட்சிகளை யாரும் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்றும், படத்திற்கு ஆதரவாக இருக்குமாறும் ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
