பகீர்!… “8 பெண்களைத் துண்டு துண்டாக வெட்டி எறிந்த சைக்கோ”.. 17 ஆண்டுகளாக மர்மம் பிட்சா துண்டால் சிக்கியது எப்படி?… நடுங்க வைக்கும் பின்னணி…!!!

By Muthu Mani on சித்திரை 9, 2026

Spread the love

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள கில்கோ கடற்கரை பகுதியில் அரங்கேறிய தொடர் கொலைகளின் மர்மம், கட்டிடக்கலை நிபுணரான ரெக்ஸ் ஹியூர்மென் (Rex Heuermann) கைது செய்யப்பட்டதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. 1993 முதல் 2010 வரையிலான 17 ஆண்டுகளில், சுமார் 8 பெண்களை இவர் கொடூரமாகக் கொலை செய்துள்ளதாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் பாலியல் தொழிலாளர்கள் என்பதும், இவர்களைப் பணம் தருவதாக ஆசை காட்டி தனது வீட்டின் அடித்தளத்திற்கு வரவழைத்துக் கழுத்தை நெரித்துக் கொன்றதும் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் பல ஆண்டுகளாகக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் இருந்த நிலையில், நவீன தொழில்நுட்பம் மற்றும் டிஎன்ஏ சோதனைகள் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தன. மேன்ஹாட்டனில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் அவர் வீசிய பீட்சா துண்டிலிருந்து சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரி, பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடலில் கண்டெடுக்கப்பட்ட முடியுடன் கச்சிதமாகப் பொருந்தியது. மேலும், ரெக்ஸ் தனது கணினியில் கொலைகளுக்கான திட்டமிடல், உடல்களைச் சிதைக்கும் முறைகள் மற்றும் ஆதாரங்களை அழிப்பது குறித்த விரிவான குறிப்புகளைச் சேமித்து வைத்திருந்ததை அதிகாரிகள் ஆதாரமாகப் பறிமுதல் செய்தனர்.

   

ரெக்ஸ் ஹியூர்மென் நடத்திய கொலைச் சம்பவங்கள் ஒவ்வொன்றும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சாண்ட்ரா கோஸ்டில்லா என்பவரில் தொடங்கி, வலேரி மேக், ஜெசிகா டெய்லர் எனப் பல பெண்களை இவர் கொன்று, உடல்களைத் துண்டு துண்டாக வெட்டி கில்கோ கடற்கரை மற்றும் சவுத்தாம்ப்டன் பகுதிகளில் வீசியுள்ளார். குறிப்பாக, 2007 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் மெலிசா பிரைனார்ட்-பார்ன்ஸ் மற்றும் மேகன் வாட்டர்மேன் உள்ளிட்ட நால்வரைக் கொன்று, அவர்களது உடல்களைச் சணல் துணியால் சுற்றி மறைத்து வைத்தது விசாரணையில் அம்பலமானது.

   

தற்போது இந்த வழக்கில் ரெக்ஸ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அவருக்கான தண்டனை விவரங்கள் ஜூன் 17 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன. அவருக்குப் பரோல் இல்லாத ஆயுள் தண்டனை மற்றும் கூடுதல் ஆயுள் தண்டனைகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக நீதி கிடைக்காமல் தவித்த பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பங்களுக்கு, பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தீர்ப்பு ஒரு சிறிய ஆறுதலை அளித்துள்ளது.