ராஜஸ்தான் மாநிலத்தில் கணவனைத் தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொலை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரியங்கா என்ற பெண், தனது கள்ளக்காதலனுடன் இணைந்து கணவர் தேவ்கிருஷ்ணாவைத் திட்டமிட்டு கொலை செய்துள்ளார். போலீசாரை திசைதிருப்ப, நள்ளிரவில் 2 முதல் 3 கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து எங்களைக் பிணைக் கைதிகளாகப் பிடித்ததாகவும், நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுத் தனது கணவரைச் சுட்டுக் கொன்றதாகவும் நாடகமாடி கதறி அழுதுள்ளார்.
ஆனால், போலீசாரின் தீவிர விசாரணையில் வெறும் 12 மணி நேரத்திற்குள் உண்மை வெளிவந்தது. விசாரணையில் தெரியவந்த பகீர் தகவல் என்னவென்றால், கணவனைத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்த பிறகு, அவனது சடலத்தின் அருகிலேயே அந்தப் பெண் தனது கள்ளக்காதலனுடன் உடலுறவு கொண்டுள்ளார் என்பதுதான். இந்த மனிதாபிமானமற்ற செயலால் அதிர்ச்சியடைந்த போலீசார், பிரியங்காவையும் அவரது கள்ளக்காதலனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர்கள் இருவர் மீதும் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
