BREAKING: மீனவர்கள் மீண்டும் கைது.. அதிகாலையில் பதற்றம்…. பற்றி எரியும் ராமேஸ்வரம்….!

By Nanthini on சித்திரை 9, 2026

Spread the love

தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையேயான கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ள சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களின் விசைப்படகு மற்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உடமைகளைப் பறிமுதல் செய்துள்ள கடற்படையினர், அவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் இத்தகைய அத்துமீறிய கைது நடவடிக்கைகள் தொடர்கதையாகி வருவதைச் சுட்டிக்காட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ள ராமேஸ்வரம் மீனவர்கள், இதற்குத் தீர்வு காணக் கோரி போராட்டங்களில் ஈடுபட முடிவெடுத்துள்ளதால் அந்தப் பகுதியில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது.