இனி இவர்களுக்கு ரேஷன் கார்டு கிடையாது… தமிழக அரசு திடீர் அறிவிப்பு… காலையிலேயே ஷாக் நியூஸ்…!

By Nanthini on சித்திரை 8, 2026

Spread the love

தமிழகத்தில் தகுதியற்ற நபர்கள் முன்னுரிமை ரேஷன் கார்டுகளை (PHH) வைத்திருப்பதை தவிர்க்கும் வகையில், தமிழக அரசு தற்போது அதிரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், ஆண்டு வருமானம் குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் உள்ள வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோர் முன்னுரிமை ரேஷன் கார்டு பெற தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய கார்டுகளை வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து அவற்றை பொது ரேஷன் கார்டாக (NPHH) மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் வீடு வீடாகச் சென்று கள ஆய்வு நடத்தி விதிகளுக்குப் புறம்பான கார்டுகள் கண்டறியப்பட்டு உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. தகுதியுள்ள ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே அரசின் நலத்திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்ய இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.