“ஹோட்டலில் உல்லாசம்” அடுத்த நொடியே EX இராணுவ வீரருக்கு திடீர் ஷாக் கொடுத்த இளம்பெண்… “இரண்டு நாள் டைம் கொடுங்க” கடைசியில் காத்திருந்த சரியான டுவிஸ்ட்…!!

By Soundarya on சித்திரை 7, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற வீரர் ஒருவர் ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் நேர்ந்த மோசடியில் சிக்கி, பின் சாமர்த்தியமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்துக் கொடுத்துள்ளார். ராணுவப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பத்து நாட்களிலேயே, அந்த நபர் பொழுதுபோக்கிற்காக ஆன்லைன் தளம் மூலம் ஒரு பெண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார். அந்தப் பெண் குறிப்பிட்ட விடுதிக்கு வந்த நிலையில், இருவரும் நேரத்தைச் செலவிட்டுள்ளனர்.

சந்திப்பு முடிந்தவுடன், அந்தப் பெண் தனது கூட்டாளிகளை அறைக்கு வரவழைத்துள்ளார். அங்கிருந்த மறைமுக கேமரா (Hidden Camera) மூலம் எடுக்கப்பட்ட வீடியோவைக் காட்டி, அந்த ராணுவ வீரரை மிரட்டத் தொடங்கியுள்ளனர். அந்த வீடியோவை வெளியிடுவதாகக் கூறி, அவரிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய்களைப் பறிக்க முயன்றுள்ளனர். அந்த கும்பலின் மிரட்டலுக்குப் பணியாத வீரர், பணத்தைத் திரட்ட இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

   

நேராகக் காவல் ஆணையரைச் சந்தித்த அந்த வீரர், தனக்கு நடந்த அனைத்து விபரங்களையும் புகாராக அளித்தார். புகாரைப் பெற்ற காவல்துறை உடனடியாகச் செயல்பட்டு, வழக்குப் பதிவு செய்து தேடுதல் வேட்டையில் இறங்கியது. சில மணி நேரங்களிலேயே இந்த மோசடியில் ஈடுபட்ட பாவனா பார்கவா என்ற பெண்ணைக் காவல்துறை கைது செய்தது. இந்த கும்பலில் தொடர்புடைய மற்ற நபர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.