பெரும் பரபரப்பு..! ஈரான் உளவுத்துறை தலைவர் படுகொலை… அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

By Soundarya on சித்திரை 6, 2026

Spread the love
ஈரான் உளவுத்துறை அமைப்பான ஐ.ஆர்.ஜி.சி-யின் (IRGC) உளவுப் பிரிவுத் தலைவராக இருந்த மஜித் கதெமி , டெஹ்ரானில் நடந்த ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்தியதாக ஈரான் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஈரானின் பாதுகாப்பு அமைப்பின் மிக முக்கிய நபராகக் கருதப்பட்ட கதெமியின் மரணம், அந்தப் பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரானியத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தங்களது முக்கியத் தலைவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது தகுந்த நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இந்தச் சம்பவம் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையேயான போர்ச் சூழலைத் தீவிரமாக்கும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.