“எனக்கு துரோகம் பண்ணிட்டியேடி” கள்ளகாதலனோடு ஓடிப்போன மனைவி… ஆத்திரத்தில் காவல்நிலையத்தில் கணவன் செய்த செயல்… போலீசாரே ஆடிப்போன சம்பவம்..!!

By Soundarya on சித்திரை 6, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில், கள்ளக்காதலனுடன் சென்ற மனைவியைப் போலீசார் முன்னிலையிலேயே கணவர் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்காரெட்டி பகுதியைச் சேர்ந்த சித்தாரெட்டியின் மனைவி கவிதா, கடந்த 27ஆம் தேதி தனது கள்ளக்காதலன் பவன் ரெட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுகுறித்து சித்தாரெட்டி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கவிதாவையும் அவரது கள்ளக்காதலனையும் மீட்டனர்.

மீட்கப்பட்ட கவிதாவைப் போலீசார் விசாரணைக்காக அழைத்து வந்தபோது, அங்கு வந்த சித்தாரெட்டி தனது மனைவியைக் கண்டதும் ஆத்திரமடைந்தார். தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கண் இமைக்கும் நேரத்தில் கவிதாவை சரமாரியாகக் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். போலீசார் முன்னிலையிலேயே நடந்த இந்த துணிகரக் கொலைச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடியில் இருந்த சித்தாரெட்டியைப் போலீசார் உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.