மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி, நிரந்தர முகவரிச் சான்று (Address Proof) இல்லாத புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் இனி எளிதாக 5 கிலோ LPG சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக முகவரிச் சான்று அளிக்க வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக ஏதாவதொரு அடையாள அட்டையை (Identity Proof) சமர்ப்பித்தாலே போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறிப்பாகச் சிறு சிலிண்டர்களைத் தேடுபவர்களுக்காக Free Trade LPG (FTL) என்ற முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு பெறப்படும் 5 கிலோ கேஸ் சிலிண்டர்களை வணிக ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது என்றும், அவற்றை வீட்டு உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
