BIG BREAKING: மாம்பழம் சின்னம் யாருக்கு..? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!

By Soundarya on சித்திரை 6, 2026

Spread the love

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சின்னமான மாம்பழம், அதன் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கட்சிக்குள் நிலவும் உள்கட்சிப் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படும் வரை, தேர்தல் ஆணையம் இந்தச் சின்னத்தை யாருக்கும் ஒதுக்கக் கூடாது என்று அவர் தனது மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தில், அன்புமணி தரப்பினர் பாமக தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்போது சின்னத்தை முடக்கக் கோருவது நியாயமற்றது என்று வாதிட்டனர். இரு தரப்பு கருத்துகளையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தற்போது தலையிட மறுப்பு தெரிவித்ததுடன், இது குறித்து முறையிட சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு ராமதாஸ் தரப்பிற்கு உத்தரவிட்டுள்ளனர்.