வெறும் 100 ரூபாய்க்கு ஆடை எப்படி கிடைக்கிறது?.. இறந்தவர்களின் துணிகள் விற்கப்படுகிறதா?… நீங்கள் வாங்கும் பிராண்டட் துணிகள் உண்மையில் யாருடையது?..!!!

By Rajeshwari on சித்திரை 3, 2026

Spread the love

டெல்லியில் உள்ள சரோஜினி நகர் மார்க்கெட்டில் விற்கப்படும் மலிவு விலை ஆடைகள் ‘இறந்தவர்களின் ஆடைகள்’ என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பரவி வருகிறது. இதில் உண்மை ஏதுமில்லை. உண்மையில், இவை பெரும்பாலும் பெரிய ஏற்றுமதி நிறுவனங்களில் இருந்து நிராகரிக்கப்பட்ட ஆடைகள் ஆகும்.

ஆனால் உற்பத்தியின் போது தையல் குறைபாடு அல்லது சிறிய பிழைகள் உள்ள ஆடைகள், மற்றும் வெளிநாடுகளில் சீசன் முடிந்த பிறகு விற்கப்படாமல் எஞ்சியிருக்கும் புதிய ஆடைகள் தான் இங்கு மொத்தமாக கொண்டு வரப்பட்டு மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

   

மேலும் சரோஜினி மார்க்கெட்டிற்கு வரும் இந்த ஸ்டாக்குகள் முக்கியமாக பங்களாதேஷ், சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளின் தொழிற்சாலைகளிலிருந்து வருகின்றன. சில நேரங்களில், சர்வதேச பிராண்டுகள் தங்கள் பழைய மாடல்களை அப்புறப்படுத்தும்போது, அவை கிலோ கணக்கில் ஏலத்திற்கு விடப்படுகின்றன.

   

இந்த ஆடைகள் முறையாக துவைக்கப்பட்டு, இஸ்திரி செய்யப்பட்டு புதியவை போல கடைகளில் அடுக்கப்படுகின்றன. எனவே, ‘இறந்தவர்களின் ஆடை’ என்பது வெறும் வதந்தியே தவிர, உண்மையில் இது உலகளாவிய ஆடை உற்பத்தி சங்கிலியின் ஒரு பகுதியாகும். இந்த உண்மையை அறியாதவர்கள் மட்டுமே தேவையில்லாத அச்சத்திற்கு ஆளாகின்றனர்.