இல்லத்தரசிகளே உஷார்… ஏப்ரல் முதல் சமையலறையில் காத்திருக்கும் பேரதிர்ச்சி… கைமீறி போகும் விலைவாசி… டிடர்ஜென்ட் முதல் எண்ணெய் வரை அதிரடி விலை உயர்வு..!!!

By Rajeshwari on சித்திரை 3, 2026

Spread the love

சமையல் எண்ணெய், சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வரும் ஏப்ரல் மாதம் முதல் 3-4 சதவீதம் வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியுள்ளதே இந்த விலை உயர்விற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

மேலும் கச்சா எண்ணெய் விலை உயரும்போது, அச்சாலை போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதோடு, சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலையும் உயர்கிறது. இதனால் முன்னணி நிறுவனங்கள் தங்கள் உற்பத்திச் செலவை ஈடுகட்ட, இந்த விலையேற்றத்தை நுகர்வோர் மீது சுமத்தத் திட்டமிட்டுள்ளன.

   

ஏற்கனவே பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர வர்க்க மக்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் இறக்குமதி செலவு அதிகரிப்பதும் சமையலறை பட்ஜெட்டைத் தலைகீழாக மாற்றும் சூழலை உருவாக்கியுள்ளது.

   

இதனால் வரும் நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்த மாற்றங்கள் அமலுக்கு வரும் என்பதால், அன்றாடத் தேவைக்கான மளிகைப் பொருட்களின் விலை கணிசமாக உயரும். இந்தத் தொடர்ச்சியான விலை உயர்வு பொதுமக்களின் வாங்கும் திறனைக் குறைப்பதுடன், குடும்பப் பொருளாதாரத்தில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.