அண்ணாமலைக்கு ‘நோஸ் கட்’?… வானதிக்கு அடித்த ஜாக்பாட்… 2021 பிளாஷ்பேக் சொல்லும் பகீர் உண்மைகள்.. அதிர்ச்சியில் தொண்டர்கள்…!!!

By Rajeshwari on சித்திரை 3, 2026

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், பாரதிய ஜனதா கட்சி தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது. கடந்த 2021 தேர்தலில் அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் இளங்கோவிடம் சுமார் 24,816 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதனைத் தொடர்ந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் கோவையில் இரண்டாம் இடம் பிடித்தாலும், தோல்வியின் காரணமாக மாநிலத் தலைவர் பதவியை இழந்தார்.

தற்போது 2026 தேர்தலில் போட்டியிட அவர் ஆர்வம் காட்டாத நிலையில், கட்சியின் மேலிடம் அவரை மயிலாப்பூர் அல்லது மொடக்குறிச்சி போன்ற தொகுதிகளில் போட்டியிட வைக்க ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

   

மறுபுறம், கோவை தெற்கு தொகுதியில் 2021-ல் கமல்ஹாசனை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற வானதி சீனிவாசன், இந்த முறை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளார். அதேபோல், கடந்த தேர்தலில் தாராபுரத்தில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த எல். முருகன், இந்த முறை அவிநாசி தொகுதியில் களம் காண்கிறார்.

   

மேலும் 2021-ல் வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன் போன்ற முக்கிய தலைவர்களின் கடந்த கால செயல்பாடுகளை ஒப்பிட்டு, இந்தத் தேர்தலில் பாஜக தனது செல்வாக்கை நிரூபிக்க தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. வானதி சீனிவாசன் மற்றும் அண்ணாமலை இடையேயான தொகுதிப் போட்டியில் வானதிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.