அடக்கடவுளே..! மனைவியின் மூக்கைக் கடித்தே துப்பிய கணவன்.. அப்படி என்ன கோபம்..? வெளியான பகீர் பின்னணி..!!

By Soundarya on சித்திரை 3, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டம், பிர்ஹட் கிராமத்தில் கணவன் தனது மனைவியின் மூக்கைக் கடித்துத் துப்பிய கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலொ கான் மற்றும் அவரது மனைவி பனா ஆகிய இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதில், ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற பொலொ கான், தனது மனைவியை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளார்.

இந்தத் தாக்குதலின் போது, மனைவியின் மூக்கைக் கடித்துத் துப்பிய பொலொ கான், அவரது கழுத்துப் பகுதியிலும் பலமாகக் கடித்ததாகத் தெரிகிறது. இதில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தப் பெண்ணை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய கணவனைத் தீவிரமாகத் தேடி வருவதோடு, இத்தகைய கொடூரமான தாக்குதலுக்கான பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.