ஒருவழியாக வெளியான அந்த உண்மை… அண்ணாமலை பெயரும் பாஜக வேட்பாளர் பட்டியலில் இருக்கு… யாரும் எதிர்பார்க்காத திருப்பம்… அரசியலில் பெரும் பரபரப்பு..!!!

By Rajeshwari on சித்திரை 1, 2026

Spread the love

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இடம்பெற்றுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற பாஜக மையக்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் உள்ளதை உறுதி செய்தாலும், அவர் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பதை தற்போது அறிவிக்க முடியாது என்று தெரிவித்தார்.

மேலும் தொகுதிகளுக்கு ஏற்ப தகுதியான வேட்பாளர்களைத் தலைமை இறுதி செய்யும் என்றும், இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, தமக்கு விருப்பமான தொகுதிகள் ஒதுக்கப்படாததால் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை என்றும், அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் செய்திகள் பரவின.

   

இதற்கிடையே, புதுச்சேரி தேர்தல் பிரசாரத்தில் இருந்த அண்ணாமலை, மேலிட உத்தரவின் பேரில் அவசரமாக ஹெலிகாப்டர் மூலம் சென்னை வரவழைக்கப்பட்டு ஆலோசனையில் பங்கேற்றார். அண்ணாமலையின் செல்வாக்கை தேர்தல் களத்தில் பயன்படுத்த பாஜக மேலிடம் விரும்புவதாகவும், அதன் காரணமாகவே அவர் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.