இனிப்பான செய்தி..! முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்களுக்கு ‘அல்வா’… கேரள அரசின் அசத்தலான அறிவிப்பு..!!

By Soundarya on பங்குனி 31, 2026

Spread the love

கேரளாவில் நடைபெறவுள்ள தேர்தலில், முதல்முறை வாக்களிக்க வரும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ஒரு சுவாரஸ்யமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, கேரளாவில் முதல்முறையாக வாக்களிக்கும் இளைஞர்களுக்கு ‘அல்வா’ வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் மட்டும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இளைஞர்களிடையே வாக்களிக்கும் ஆர்வத்தைத் தூண்டவும், ஜனநாயகக் கடமையைச் சிறப்பாகக் கொண்டாடவும் இந்த ‘தேர்தல் திருவிழா 2026’ முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் இந்தப் புதிய முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.