பெட்ரோல், டீசல் விலை… அதிர்ச்சித் தகவல்… உலக நாடுகளை உலுக்கும் அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம்…!

By Nanthini on பங்குனி 31, 2026

Spread the love

சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை தற்போது ஒரு பேரல் 116 டாலராக உயர்ந்துள்ள நிலையில், ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நகர்வுகள் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த போர்ச் சூழலால் உலகின் பல நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 60% வரை விண்ணைத் தொட்டுள்ள போதிலும், இந்திய அரசு கலால் வரியை ₹10 குறைத்ததன் மூலம் உள்நாட்டில் விலை உயர்வு தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருப்பதால், அதன் தாக்கம் வரும் நாட்களில் இந்தியாவிலும் எதிரொலிக்கும் என்றும், வாகன எரிபொருட்களின் விலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.