BREAKING: ₹2,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு..!!

By Muthu Mani on பங்குனி 29, 2026

Spread the love

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படுமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே மகளிருக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும் எனத் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்துள்ளன. ஒருவேளை அதிமுக ஆட்சிக்கு வந்தால், இந்தத் திட்டம் ‘குலவிளக்குத் திட்டம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த புதிய திட்டத்திற்கான தகுதி வரம்புகள் அல்லது விதிமுறைகள் குறித்த விரிவான தகவல்களை அதிமுக தரப்பு இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இதனால், நடைமுறையில் உள்ள திட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது.