இனி டேட்டா தீர்ந்துடுமேன்னு கவலை இல்ல… பழைய பிளானை மறந்துடுங்க… ஜியோவின் இந்த புதிய பிளான் தெரிந்தால் இப்போவே ரீசார்ஜ் செய்திடுவீங்க…!!!

By Rajeshwari on பங்குனி 29, 2026

Spread the love

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிரடியான சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, ஜியோ ஹோம் பிராட்பேண்ட் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், 3 மாதங்களுக்கான ரீசார்ஜ் திட்டத்தைத் தேர்வு செய்யும் போது, கூடுதலாக ஒரு மாதம் இலவச வேலிடிட்டியைப் பெற முடியும்.

அதாவது, மூன்று மாதக் கட்டணத்தில் நான்கு மாதங்கள் வரை இணையம் மற்றும் இதர சேவைகளைத் தடையின்றி அனுபவிக்கலாம். ஜியோவின் இந்தச் சலுகையானது புதிய இணைப்புகளைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

   

இந்தச் சலுகையின் கீழ் ரூ.555, ரூ.833 மற்றும் ரூ.1,199 ஆகிய விலையிலான திட்டங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. ரூ.555 திட்டமானது 30 Mbps வேகத்தில் மாதம் 1000 GB டேட்டா மற்றும் 800-க்கும் மேற்பட்ட நேரலை டிவி சேனல்களை வழங்குகிறது.

   

அதேபோல், ரூ.833 மற்றும் ரூ.1,199 திட்டங்கள் 100 Mbps அதிவேக இணையத்துடன் 16-க்கும் மேற்பட்ட OTT செயலிகளின் சந்தாவையும் வழங்குகின்றன. குறைந்த செலவில் அதிக பலன்களை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு, ஒரு மாதக் கூடுதல் வேலிடிட்டி வழங்கும் ஜியோவின் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.